முழுக்கோதுமை மாவு ( Whole Wheat Flour) தவிடு நீக்கப்பட்டு, பலமுறை சுத்திகரிக்கப்பட்டு வெள்ளைவெளேரென சந்தைக்கு வரும் கோதுமை மாவு (மைதா மாவு) எமது உணவுப் பழக்க வழக்கங்களில் முக்கிய அங்கமாக மாறிவிட்டது. ஆனால் முழுக்கோதுமை மாவு ( Whole Wheat Flour ) பற்றி நாம் ஏன் இதுவரை சிந்திக்கவில்லை. முழுக்கோதுமை மாவு என்பது, ஆட்டாமாவினை விடவும் அதிகூடிய நார்ச்சத்தினைக் கொண்டுள்ளது. அதனை விட B vitamins, iron, magnesium போன்ற ஊட்டச் சத்துக்கள் அடங்கியிருக்கின்றன. மேலும் முழுக் கோதுமை மாவு அல்லது ஆட்டாமாவு எதுவாக இருந்தாலும் எமது உணவு தயாரிப்பு முறையிலேயே அதன் ஆரோக்கியம் என்பது முழுமையாக தங்கி இருக்கின்றது. Whole Wheat Flour - Sawbagyam - PA&Mills - Trincomalee - Sampalthivu